தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் மேலும் 4 பேருக்கு கொரோனா - முதியவர் உள்பட நால்வரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மேலும் நால்வருக்கு கொரோனோ வைரஸ் தொற்றியுள்ளது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
பரபரப்பான கோயம்பேடு காய்கறிச் சந்தையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளளது. காய்கறி வியாபாரியான நெற்குன்றத்தை சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர், மொத்த வியாபாரி ஒருவர், சந்தையில் பணியாற்றும் மதுரவாயலைச் சேர்ந்த 26 வயது இளைஞர் மற்றொரு தொழிலாளர் உள்பட 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. ஏற்கனவே, கோயம்பேடு சந்தையில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில், தற்போது 7 ஆக உயர்ந்துள்ளது. 4 பேரும் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சந்தையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடி, தனிமைப்படுத்தும் நடவடிக்கை நடைபெறுகிறது. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் பீதியில் உள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு