கோயம்பேடு சந்தை ஒட்டியுள்ள அவ்வை திருநகர் தெரு, காந்தி தெரு உள்ளிட்ட தெருக்களை சேர்ந்த 5 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர, மயிலாப்பூர், சேத்துப்பட்டு, அசோக் நகர், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். சென்னை சேத்துப்பட்டில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு நபர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரில் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 46 வயது மருத்துவர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே முதுநிலை படிப்பை படித்து வந்த ஒரு இதே போல், கோயம்பேடு பூ மார்க்கெட்டைச், சேர்ந்த 5 வியாபாரிகளுக்கு இன்று கொரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.