கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என உயர் நீதிமன்றத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, தேவைப்படும் பட்சத்தில் கடையில் உள்ள பொருட்களை எடுக்க துறை சார்ந்த அதிகாரியை உரிமையாளர்கள் நாடலாம் என உத்தரவிட்டு , விசாரணையை ஜூன் 5ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.