கோவை - ஆவாரம்பாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் 190 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை அடமானம் வைத்திருந்தார். 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்த அவர், நகை ஏலம் விடும் நிலைக்கு வந்தது கண்டு பணத்தை செலுத்த சென்றார். அப்போது நகைகளை அவர் வாங்கிய போது அது கவரிங் நகைகள் என தெரியவந்தது. தகவல் அறிந்ததும், இந்த வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்கள் திரண்டு வந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.