கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கனமழையின் காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள சுற்றுச் சுவரை உடனடியாக அகற்ற வேண்டும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வீட்டின் உரிமையாளரை கைது செய்யக் கோரியும், உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு கோரியும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, காவல்துறை கைது செய்துள்ள நிலையில், உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.