தமிழ்நாடு

சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த எலினா.. இறுதி சடங்கிற்கு சென்ற மாணவர்கள் - பள்ளி நிர்வாகம் எடுத்த முடிவு

தந்தி டிவி

கோவை கூடைப்பந்து வீராங்கனை எலினா உடல், கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள், பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் கேரளாவிற்கு சென்றனர். எலினாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவையில் உள்ள அவரது வீட்டின் அருகே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. வீராங்கனை உயிரிழந்ததை தொடர்ந்த, அவர் படித்த பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகத்தை அணுகிய போது, மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் தான் முழு விவரம் தெரியவரும் எனக் கூறியுள்ளது.இதனிடையே, ரயில் உணவை சாப்பிட்டு கூடைப்பந்து வீராங்கனை இறந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது. எனினும், இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்