தமிழ்நாடு

கோவை : மாற்றுத்திறளாளி குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

கோவை நல்லாம்பாளையம் வ.உ.சி. நகரில் வசிப்பவர் சிவகுமார்.

தந்தி டிவி

கோவை நல்லாம்பாளையம் வ.உ.சி. நகரில் வசிப்பவர் சிவகுமார். இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு 13 வயதில் திவ்யதர்ஷினி என்ற மகளும், பதினோரு வயதில் பிரனேஷ் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் வாய்பேச முடியாதவர்கள் என கூறப்படுகிறது. சிவக்குமார் அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்ததால், கவுரி சோகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது தந்தை வீட்டில் வசித்து வந்த கவுரி, வீட்டில் யாரும் இல்லாத போது, இரு மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் தூக்கு மாட்டி கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்