தமிழ்நாடு

கட்டைப்பையில் கதறி அழுது கொண்டிருந்த குழந்தை...

கோவை அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள கலை கல்லூரி சாலையில், கட்டைப்பையில் கதறி அழுது கொண்டிருந்த, பிறந்து சில நாட்களான குழந்தையை கல்லூரி மாணவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தந்தி டிவி
கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் சந்திரசேகர் மற்றும் சத்தியதரன், நேற்று இரவு தேர்வுக்கான புத்தகங்களை வாங்கிக் கொண்டு கலைக் கல்லூரி சாலை வழியாக தங்களின் இருப்பிடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பார்த்த போது, அரசு மருத்துவமனையின் பின் வாசலின் அருகே உள்ள நடைபாதையில் இருந்த கட்டைப்பையில் பிறந்து சுமார் ஏழே நாட்கள் ஆன ஆண் குழந்தை ஒன்று கதறி அழுது கொண்டிருந்தது. இதையடுத்து, மாணவர்கள் அளித்த தகவலை பேரில் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள், குழந்தையை மாணவர்கள் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, மருத்துவர்கள் குழந்தையின் உடல் நிலையை பரிசோதித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் குழந்தைகள் நலத்துறையினர் குழந்தையின் தாய் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்