தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை வழக்கு : கைதானவர் கோவை மத்திய சிறையில் அடைப்பு

கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியில் கடந்த 25ஆம் தேதி காணாமல் போன 7 வயது சிறுமி, 26ஆம் தேதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தந்தி டிவி
கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியில் கடந்த 25ஆம் தேதி காணாமல் போன 7 வயது சிறுமி, 26ஆம் தேதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார். அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது. போலீஸ் விசாரணையில் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை கைது செய்யப்பட்டார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து சந்தோஷ் குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வரும் 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சந்தோஷ் குமார், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்