தமிழ்நாடு

கோவை : சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் - குற்றவாளி மீது தாக்குதல்

கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கில் கைதான சந்தோஷ்குமாரை, மருத்துவமனையில் வைத்து பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு நிலவியது.

தந்தி டிவி

துடியலூர் அருகே 7 வயது சிறுமி கடந்த மாதம் 25ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில், கடந்த 31ம் தேதி சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, மகளிர் நீதிமன்ற நீதிபதி தேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாள் நீதிமன்ற காவலில் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சந்தோஷ்குமாருக்கு, கோவை அரசு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. சந்தோஷ்குமாரை பார்த்த பொதுமக்கள், பரிசோதனை முடிந்து திரும்பும் வரையில் காத்திருந்து சரமாரி தாக்கினார்.​ பொதுமக்களிடம் இருந்து சந்தோஷ்குமாரை, சிரமப்பட்டு காப்பாற்றிய போலீசார், வேகமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். மீண்டும் சந்தோஷ்குமார் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்