கோவையில் தாறுமாறாக காரை ஓட்டி அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டது. சாய்பாபா காலனி பாரதி பார்க் 2வது கிராஸ் சாலையில் அதிவேகமாக வந்த கார், எதிரே சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. பின்னர் சாலை ஓரம் நின்றிருந்த ஒரு கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அப்பகுதி மக்கள் விரட்டி சென்று பிடிக்க முயற்சிக்கையில் கார், ஒரு வீட்டின் கேட் மீது மோதி நின்றது. காரில் இருந்த 3 பேரும் இறங்கி தப்பிக்க முயற்சிக்கையில் அவர்களை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 3 பேரும் 18 வயதுக்கு குறைவானவர்கள் என்பதும் காரை எடுத்து ஊர் சுற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் அவர்களின் பெற்றோரை காவல்நிலையம் வரவழைத்துள்ளனர்.