தமிழ்நாடு

அப்பா வாங்கி வந்த கொத்து பரோட்டோ.. ஆசையாக சாப்பிட்ட மகன்களுக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

கொத்து பரோட்டாவில் துண்டு துண்டாக கிடந்த பல்லியின் உடல்... பரோட்டாவை சாப்பிட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பள்ளி சிறுவர்கள்.. மனதை அதிரச் செய்திருக்கும் இந்த சம்பவம் குறித்து பார்க்கலாம் விரிவாக...

ஆசையாய், ஆசையாய் தந்தையை கொத்து பரோட்டோ வாங்கி வரச் சொன்ன இரு மகன்களுக்கு நேர்ந்த விபரீதம்தான் மனதை பதற வைக்கும் இந்த அதிர்ச்சி சம்பவம்..

துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பல்லி கிடந்த பரோட்டாவை சாப்பிட்டு இருவரும் மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..

இருவரும் பத்து மற்றும் 12 வயதேயான பள்ளி சிறுவர்கள் என்ற நிலையில், சம்பவத்தன்று இரவு சாப்பிட்டு விட்டு விழி பிதுங்கி நின்ற மகன்களை தூக்கிக் கொண்டு தம்பதி மருத்துவமனைக்கு ஓடியிருக்கின்றனர்...

இந்த களேபரத்துக்கு மத்தியில், கடைக்காரரின் அலட்சியமும், போலீசாரின் நடவடிக்கையின்மையும் தன்னை மேலும் காயப்படுத்துவதாக தெரிவித்திருக்கிறார் சிறுவர்களின் தயார்...

தங்களது குழந்தைகளை ஹோட்டல் நிர்வாகத்தினர் வந்து பார்க்க கூட இல்லை என்று வேதனை தெரிவிக்கும் இந்த தாய், அரசும், காவல்துறையும் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது...

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு