தமிழ்நாடு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 6 ரஷ்யர்கள் செய்த பகீர் செயல்.. கடைசி நொடியில் பிடித்த போலீஸ்

தந்தி டிவி

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் டாக்குமென்ட்ரி படம் எடுக்க முயன்ற 6 ரஷ்யர்கள் உட்பட 9 பேரை பிடித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

ரோசோட்டம் எனப்படும் ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழகத்தைச் சார்ந்த சிலோவா இரினா என்பவர் தலைமையில் 6 பேர் கொண்ட ரஷ்யர்கள் குழு கூடங்குளம் வந்துள்ளனர். அவர்களுக்கு வள்ளியூரை சேர்ந்த 2 பேரும், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவரும் உதவி செய்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அணு உலை குறித்து டாக்குமென்ட்ரி படம் எடுப்பதற்காக வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ரஷ்யர்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்து, 9 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து 6 மணி நேரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இடிந்தகரை ஊருக்கு மேற்கே அணு உலைக்கு ஒரு கிலோ மீட்டர் கிழக்கு பகுதியில் போட்டோ எடுத்த‌து தெரிய வந்த‌து. இதையடுத்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர், புகைப்பட ஆவணங்களை அழித்துவிட்டு விடுவித்தனர். இதனால், கூடங்குளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை