தமிழ்நாடு

கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தம்

கூடங்குளத்தில் 2 அணு உலைகளிலும் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் உள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி பராமரிப்பு பணிக்காக 2 வது அணு உலையில் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்து அதே மாதம் 26 ந்தேதி மாலை மீண்டும் மின் உற்பத்தி துவங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை பராமரிப்பு பணிக்காக மீண்டும் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது . இதனால் 1000 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதலாவது அணு உலை கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பராமரிப்பு மற்றும் எரிப்பொருட்கள் நிரப்பும் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு அணு உலைகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், மின் உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளது.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்