தமிழ்நாடு

Koodankulam Issue| கூடங்குளம் அணுமின் நிலையம் முன் திடீர் பரபரப்பு

Koodankulam Issue| கூடங்குளம் அணுமின் நிலையம் முன் திடீர் பரபரப்பு

thanthitv

கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பு திடீர் தர்ணா - கைது நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரி பொதுமக்கள் நடத்திய திடீர் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இயங்கி வரும் அணு உலைகளுடன் மேலும் நான்கு அணு உலைகளின் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அணுமின் நிலையத்திற்கு நிலம் வழங்கியவர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி, அப்பகுதி மக்கள் அணுமின் நிலைய நுழைவுவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் கூடங்குளம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்