தமிழ்நாடு

கொல்லிமலை: மது அருந்திவிட்டு அருவியில் குளிக்கும் ஆண்கள் - உரிய நடவடிக்கை எடுக்க பெண்கள் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசிலா அருவியில், ஆண்கள் மது அருந்திவிட்டு குளிப்பதால், அருவிக்கு செல்ல பெண்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசிலா அருவியில், ஆண்கள் மது அருந்திவிட்டு குளிப்பதால், அருவிக்கு செல்ல பெண்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

ஆகாய கங்கை அருவிக்கு செல்ல, 1000 படிக்கட்டுகள் கீழிறங்கி செல்ல வேண்டியதால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, மாசிலா அருவியே, விருப்பமான இடமாக திகழ்ந்து வருகிறது.இந்நிலையில், அங்கு சுற்றுலா வரும் ஆண்கள் சிலர், மது அருந்திவிட்டு அரைகுறை ஆடையுடன் அருவியில் குளிப்பதாக கூறப்படுகிறது. இதனால், அருவியில் குளிக்க அச்சப்பட்டு பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்