தமிழ்நாடு

கொள்ளிடம் விபத்து : தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது - தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் லோகநாதன்

அரியலூர் அருகே ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கிராமமக்கள், ஆற்றை கடந்து செல்ல படகுகளை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிவரும் நிலையில், 42 பேருடன் சென்ற படகு கவிழ்ந்தது. இதையடுத்து, அக்கம் பக்கம் இருந்தவர்கள் 10 பேரை மீட்டனர். 2 கிலோ மீட்டர் தூரம் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட படகையும் மற்ற சிலரையும் தஞ்சை மாவட்ட கிராம மக்கள் மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் படகில் பயணித்த சுயம்பிரகாசம், ராணி, பழனிச்சாமி ஆகியோரை காணவில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர், காவிரி கரையோர பகுதி மக்களுடன் சேர்ந்து

மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்