தமிழ்நாடு

ஆற்றில் கல்லூரி மாணவியிடம் அத்து மீற முயன்ற இளைஞர்கள் : தடுக்க முயன்ற காதலனை ஆற்றில் வீசிய கும்பல்

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தனிமையில் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியை மடக்கிய கும்பல், காதலனை ஆற்றில் தூக்கி வீசி விட்டு காதலியிடம் அத்துமீற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் சமயபுரம் கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் திட்டில் அமர்ந்து கல்லூரியில் படிக்கும் காதல் ஜோடி ஒன்று தனிமையில் பேசிகொண்டிருந்த‌னர். இதனை பார்த்த அங்குள்ள 5 இளைஞர்கள், கல்லூரி மாணவியிடம் அத்துமீற முயன்றனர். தடுக்க முயன்ற காதலன் ஜீவித்தை தாக்கிய இந்த கும்பல், கொள்ளிடம் ஆற்றின் ஆழமான பகுதியில் தூக்கி வீசி விட்டு தப்பி ஓடியது. இளைஞர்களிடம் இருந்து தப்பி பிழைத்த மாணவி, கொள்ளிடம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி தஞ்சம் அடைந்தார். மாணவி அளித்த புகாரின் பேரில், தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் கொள்ளிடம் ஆற்றில் மாணவர் ஜீவித்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்