தமிழ்நாடு

கல்லணையில் கொள்ளிடம் பாலம் கட்டுமான பணி தீவிரம்

திருச்சி கல்லணையில், கொள்ளிடம் ஆற்றில் 67 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
திருச்சி கல்லணையில், கொள்ளிடம் ஆற்றில் 67 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. 60 சதவீத பணிகள் முடிந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் 45 கேடர்கள் அடித்துச் செல்லப்பட்டு மண்ணில் புதைந்தன. அவற்றை பாலம் கட்டும் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. இதனை அடுத்து கேடர்களை ஆய்வு செய்த அதிகாரிகள், சேதமடைந்த கேடர்களை 2 ராட்சத இயந்திரங்களை கொண்டு உடைத்து அகற்றும் பணியை தொடங்கி உள்ளனர். இந்த பணி முடிவடைந்த பின்னர், புதிய கேடர்கள் செய்யப்பட்டு அவற்றை தூண்களின் மீது பொருத்தும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்