கோடநாடு கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் உதகை நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து விட்டு கொள்ளையடித்த விவகாரத்தில் சயான், மனோஜ், பிஜன், உதயன், சந்தோஷ் ஆகிய 10 பேர் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர். இந்த பரபரப்பான வழக்கில், 10 பேர் ஆஜராக உள்ளதால், நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமின் மனுவும் இன்று விசாரிக்கப்படவுள்ளது.