தமிழ்நாடு

கொடைக்கானல்: தனியார் படகு குழாமிற்கு சீல் - படகுகளை இயக்க தடை

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவை தொடர்ந்து கொடைக்கானல் ஏரியில் இயங்கி வரும் தனியார் படகு குழாமிற்கு சீல் வைக்கப்பட்டது.

தந்தி டிவி

கொடைக்கானலை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், நட்சத்திர வடிவ ஏரியில் உள்ள தனியார் படகு குழாம் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க அரசே ஏற்று நடத்த வேண்டும் மனு அளித்திருந்தார். மனுவில் தனியார் படகு குழாம் குத்தகை காலம் கடந்து செயல்பட்டு வருவதாகவும், விதிகளை மீறி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் 150 படகுகளை இயக்கி ஆண்டுக்கு கோடி கணக்கில் வருவாய் ஈட்டுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில், தனியார் படகுகளை இயக்க தடை விதித்து, படகு குழாமிற்கு சீல் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி, இன்று நகராட்சி ஆணையாளர் தலைமையில் தனியார் படகு குழாமிற்கு சீல் வைக்கப்பட்டு, படகு இயக்க தடை விதிக்கப்பட்டது.

TN Budget 2026 | "பெயர் மாற்றம்.. 50 வருஷமா எல்லா கட்சியும் இதைத்தான் பண்ணிருக்காங்க.." - சுபேர்

CM Vijay | தீவிரமாக இறங்கிய CM விஜய்.. உடனே வந்த முக்கிய துறை

TN Budget 2026 | "தேவைப்பட்டால் நடக்கலாம்" - சபாநாயகர் சொன்ன முக்கிய தகவல்

TN Budget 2026 | வெற்றியாக மாறிய விடியல்.."பல தலைவர்கள் கைவிட்ட திட்டத்தை கையில் எடுத்த CM விஜய்.."

EPS | TNBudget | காவிரி விவகாரம் குறித்து விழுந்த கேள்வி - உதாரணம் சொல்லி நேரடியாக அடித்த EPS