தமிழ்நாடு

பெண்ணை கொலை செய்த 11ம் வகுப்பு மாணவி கைது : காதலனுடன் தனிமையில் இருந்ததை மிரட்டியதால் ஆத்திரம்

காதலனுடன் தனிமையில் இருந்ததை கண்டு மிரட்டிய பெண்ணை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த 11ம் வகுப்பு மாணவியை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த கேசவன் மனைவி சுந்தரி. கணவரை பிரிந்து அதே பகுதியில் முருகானந்தம் என்பவருடன் அவர் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. முருகானந்தம் சென்னையில் வேலை பார்ப்பதால் சுந்தரி மட்டும் வீட்டில் தங்கிய நிலையில், கடந்த 22-ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் சுந்தரி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், 21-ந் தேதி இரவு முருகானந்தத்தின் சகோதரியின் மகள் தாரணி தங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் சுந்தரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தம்முடன் 11ம் வகுப்பு படிக்கும் சுதீஸ் என்ற மாணவருடன், தனிமையில் இருந்ததை சுந்தரி பார்த்து கண்டித்ததுடன், பெற்றோரிடம் கூறி விடுவதாக மிரட்டியதால் அவரை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து தாரணியை கைது செய்து மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்த போலீசார், தலைமறைவாக உள்ள சுதீஸை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்