கொடைக்கானல் மலைப்பகுதியில் பயிரிடப்பட்ட கேரட்டுக்கு கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, அடிசரை, அய்யர்கிணறு உள்ளிட்ட மலைகிராமங்களில் கேரட் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட் தற்போது 35 ருபாய் வரை விலை போவதாகவும், இந்த ஆண்டு கேரட் விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.