விளைச்சல் சரிந்தபோதும், கேரட்டின் விலை உயர்ந்துள்ளால் கொடைக்கானல் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் விவசாயிகள் அதிகளவு கேரட் பயிர் செய்து வரும் நிலையில், நடப்பாண்டு பருவ மழை குறைந்ததால், வில்பட்டி, அட்டுவம்பட்டி, பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் குறைவான அளவிலேயே கேரட் பயிரிடப்பட்டிருந்தது. இதனால், கேரட் விளைச்சல் சரிந்துள்ள நிலையிலும், தேவை அதிகரித்துள்ளதால், கடந்த 10 நாட்களாக கேரட் கிலோ 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. திடீர் விலை உயர்வால், மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், கேரட் அறுவடை பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.