தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், காவிரியாற்றில் வரும் கூடுதல் தண்ணீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட திட்டம் இது என்றும், இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும் என தெரிவித்தார்