பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதிய கடிதத்தில், சுயதொழில் புரிவோர், சிறு,மற்றும் சில்லறை வியாயாரிகளுக்கு ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டதற்கு, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலன் காக்க, கிஸான் திட்டத்தை விரிவு படுத்தியதற்காகவும் கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி கூறியுள்ளார். மேலும், மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் இந்த முடிவால் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் பலன் அடைவார்கள் என்றும் இதுபோன்ற நலத் திட்டங்களை தொடரும் மத்திய அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.