தமிழ்நாடு

கீழ்ப்பாக்கம் அரசு ஹாஸ்பிடலில் திடீர் தீ விபத்து.. அவசர அவசரமாக மாற்றப்பட்ட நோயாளிகள்

தந்தி டிவி

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்தவமனையின் இரண்டாவது தளத்தில், கரும்புகையுடன் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்த நோயாளிகள் வேறொரு அறைக்கு மாற்றப்பட்ட நிலையில் இதுகுறித்து மருத்துவ ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் அரை மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். தீயானது உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. பின்னர் தகவல் அறிந்த வந்த கீழ்ப்பாக்கம் போலீசார் தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்