தமிழ்நாடு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெடுங்காம்பூண்டி கிராமத்தில் கடந்த 5 மாதமாக குடிநீர் இன்றி கிராமமக்கள் தவித்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, பெண்கள் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டம் காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Ajith Mother | Ajith | CM Vijay | தாய் மறைவு - கலங்கி நிற்கும் நண்பன் அஜித்.. நேரில் வரும் CM விஜய்

TN Govt | IAS | IAS அதிகாரிகள் அதிரடி திடீர் மாற்றம்.. தொடரும் அதிரடி

Breaking | CUET Exam | CUET தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன NTA

LokBhavan | Governor | Thiruvalluvar | காவி உடையில் திருவள்ளுவர் ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் சர்ச்சை

Sand Storm | சுனாமி அலை போல் அடித்த மணல் புயல் - பகலிலேயே இருளான ராஜஸ்தான்