அப்பல்லோ மருத்துவர்கள், கண்டுபிடித்துள்ள அந்த இயந்திரத்தின் பெயர் ஹோப் ஆகும். இந்த இயந்திரத்தில் சிறுநீரகத்தை வைத்தால் அதன் இயங்கும் தன்மை 10 முதல் 12 மணி நேரங்கள் வரை செயலிழக்காமல் இருக்கும். சிறுநீரகத்துக்கு ரத்த ஓட்டம் இருந்தால் எப்படி இருக்குமோ அது மாதிரியான சூழல் இந்த இயந்திரத்தில் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த ஹோப் இயந்திரத்தை பயன்படுத்தி 18 வயது சிறுவன் மற்றும் 36 வயது பெண் ஒருவருக்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.