தமிழ்நாடு

பிரபல ரவுடி காரில் கடத்தல்..! தலையை வெட்டி வீசிய மர்ம கும்பல்.. காஞ்சிபுரம் கோயில் அருகே பயங்கரம்

தந்தி டிவி

வெண்குடி கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்பவர், போதை பழக்கங்களுக்கு ஆளானதுடன் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அஜீத்தை நேற்றிரவு சிலர் காரில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் வள்ளுவப்பாக்கம் அருகே ரயில்வே கேட் பகுதியில், அஜீத்தை கொடூரமாக கொலை செய்து, தலையை துண்டித்துள்ளனர். பின்னர், துண்டிக்கப்பட்ட தலையை, தாங்கி கிராமத்தில் உள்ள கோயில் அருகே வீசி சென்றுள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் உடலையும், தலையையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், திம்மராஜாம் பேட்டையைச் சேர்ந்த விக்கி, கரசங்கால் பகுதியைச் சேர்ந்த பிரபாஸ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்