தமிழ்நாடு

தென்மேற்கு பருவமழை தீவிரம் - கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு

கேரளா மாநிலத்தில் தற்பொழுது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்கு பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இடுக்கி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடுக்கி மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 115 புள்ளி 6 மில்லி மீட்டர் முதல் 204 புள்ளி 4 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 64 புள்ளி 5 மில்லி மீட்டர் முதல் 115 புள்ளி 5 மில்லி மீட்டர் வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், ஆற்றங்கரைகள், நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் தீவர எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?