சென்னை வந்துள்ள கேரள மீன்வளத்துறை அமைச்சர் மெர்சி குட்டி அம்மா , அமைச்சர் ஜெயக்குமாரை சென்ன நந்தனத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழக- கேரள மீனவர்கள் பிரச்சனையின்றி சுமூகமாக தொழில் செய்வதற்கு ஆக்கப்பூர்வமான யோசனைகள் பகிர்ந்து கொண்டதாக கூறினார். பின்னர் பேசிய கேரள அமைச்சர் மெர்சி குட்டி அம்மா, ஆபத்து காலங்களில் கடலில் மீனவர்களின் படகுகளை கண்காணித்து தொடர்பு கொள்ளும் வசதி தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.