தமிழ்நாடு

Kerala |5 ஆண்டுகளாக தாங்க முடியாத வலி..XRay எடுத்து பார்த்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி -கதறி அழுத காட்சி

5 ஆண்டுகளாக தாங்க முடியாத வலி..XRay எடுத்து பார்த்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி -கதறி அழுத காட்சி

thanthitv

Kerala | 5 ஆண்டுகளாக தாங்க முடியாத வலி.. XRay எடுத்து பார்த்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி - கதறி அழுத காட்சி அறுவை சிகிச்சையில் பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது.... கேரளாவில் உள்ள அரசு மருத்துவமனையில் 5 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் 12 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்திரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா மாவட்டம் புன்னப்ராவைச் சேர்ந்த உஷா ஜோசப் என்பவருக்கு, கடந்த 2021ம் ஆண்டு ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்பப்பை கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை செய்யபட்டது.. அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடுமையான வயிற்று வலி, சிறுநீரில் ரத்த கசிவு போன்ற உபாதைகளால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில், அவரது வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேல் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள அவருக்கு இன்று அறுவை சிகிச்சை மூலம் கத்திரிக்கோல் அகற்றப்படவுள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்