தமிழ்நாடு

கவின் கேர் நிறுவனத்தின் புதிய உணவகம் திறப்பு விழா

தந்தி டிவி

கவின் கேர் நிறுவனத்தின் புதிய உணவகம் திறப்பு விழா

கடலூரில் சி.கே. கல்விக் குழுமமும் கவின்கேர் நிறுனமும் இணைந்து நடத்தும் சி.கே. உணவகத்தின் திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

அனைவருக்கும் தரமான உணவு அன்புடனும் மரியாதையுடனும் வழங்கப்பட வேண்டும் என்ற தனது கொள்ளு பாட்டியின் கனவையும், அவர் கடைப்பிடித்து வந்த பாரம்பரியத்தையும் முன்னெடுத்து செல்லும் வகையில், கவின்கேர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அமுதவல்லி இந்த உணவகத்தினை தொடங்கி வைத்தார். 200க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் உணவருந்தும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில் காலை, மதியம், இரவு வேளைகளில் உணவுகள் 10 ரூபாய் முதல் கிடைக்கின்றன. மேலும் மாணவர்களுக்கு சேவை செய்வதன் அர்த்தத்தை கற்றுகொடுக்கும் ஒரு வாய்ப்பாக இந்த உணவகம் செயல்படுவதாக சி.கே. கல்வி குழும நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.

Rahul Gandhi|Supreme Court |``எங்களை யாரும் மிரட்ட முடியாது’’ - சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிரடி

Breaking | Banned in Flight | விமானத்தில் தீப்பிடித்த சம்பவம் | அதிரடியாக தடை

Breaking | TN Rains | Chennai Rains | 20 மாவட்டங்களுக்கு வந்தது அலர்ட்

Pocso கேஸில் ஜாமீனில் வந்தவருக்கு கல்லூரி முதல்வர் பதவியா? ஹைகோர்ட் பரபரப்பு கேள்வி

SIR Issue இந்தியா கூட்டணி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு