தமிழ்நாடு

ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகளுடன் நகை ஏஜெண்ட் ஓட்டம்

கரூரில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகளுடன் வடநாட்டு நகை ஏஜெண்ட் தலைமறைவானதை அடுத்து, கரூர் டிஎஸ்பி தலைமையில் 2 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

தந்தி டிவி

கரூரில் தனியார் நகைக் கடை ஒன்றுக்கு மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த தீபக் மிட்டல் என்பவர் 10 ஆண்டுகளாக நகை சப்ளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.75 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்கம் கட்டிகளை வாங்கி சென்ற தீபக் மிட்டல் தலைமறைவாகியுள்ளார். தீபக் மிட்டலுடன் கடந்த 2-ஆம் தேதி முதல் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், கரூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் கடை உரிமையாளர் நந்தா ராஜேஷ் புகார் அளித்தார்.

இதனையடுத்து, கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜசேகரன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி தலைமையில் 2 தனிப்படை போலீசார் தீபக் மிட்டலை தேடி குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு