தமிழ்நாடு

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி - கந்துவட்டி கொடுமை என விசாரணையில் தகவல்

ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

கரூர் மாவட்டம் பெரிய வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ், இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர், கந்துவட்டிக்காரரிடம் 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.பணத்தை தருமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் மனம் உடைந்த அந்தோணிராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மனைவி, குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்தோணிராஜை தடுத்து நிறுத்தினர்.பின்னர் அவர்கள் விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்