தமிழ்நாடு

நள்ளிரவில் வீடு புகுந்து சேவல்கள் திருட்டு - துரத்தி சென்ற அதிமுக பிரமுகருக்கு வெட்டு

கரூரில் நள்ளிரவில் வீடு புகுந்து கட்டு சேவல்களை திருடி சென்ற மர்ம நபர்களை துரத்தி சென்ற அதிமுக பிரமுகரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

கரூரில் நள்ளிரவில், வீடு புகுந்து, கட்டு சேவல்களை திருடி சென்ற மர்ம நபர்களை, துரத்தி சென்ற அதிமுக பிரமுகரை, அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி, அதிமுக செயலாளராக உள்ள வேணுகோபால், 10க்கும் மேற்பட்ட கட்டு சேவல்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில், 6 பைக்கில் வந்த 12 மர்ம நபர்கள், சேவல்களை திருடி சென்றுள்ளனர். அவர்களை வேணுகோபால் துரத்தி சென்ற நிலையில், மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். வேணுகோபால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்