கரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 550 ரூபாய் மதிப்புள்ள 10 பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு பைகள் ஒரு லட்சம் நபர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டு, 21ம் தேதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், மண்மங்கலம் பகுதியில் வீடு வீடாக சென்று நிவாரண பொருட்களை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். மேலும், ஆத்தூர் பூலாம்வலசு வடுகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு 25 வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை அவர் அனுப்பி வைத்தார்.