கார்த்திகை பெளர்ணமி - சதுரகிரியில் குவியும் பக்தர்கள் #sathuragiriHill #virudhunagar #devotees #karthigaideepam #karthikamasam #thanthitv கார்த்திகை பௌர்ணமி - சதுரகிரி கோவிலில் குவிந்த பக்தர்கள் கார்த்திகை மாத பௌர்ணமியை ஒட்டி, விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை ஒட்டி நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறிச் செல்ல வனத்துறையினரும் கோவில் நிர்வாகத்தினரும் அனுமதி அளித்தனர். இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதலே கோயில் அடிவாரத்தில் குவிந்த பக்தர்கள் மலையேறிச் சென்று சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசித்தனர். இருப்பினும், பக்தர்களின் வருகை வழக்கத்தைவிடக் குறைவாகவே காணப்பட்டது.