தமிழ்நாடு

மேகதாது அணை குறித்து பேச தமிழக முதலமைச்சர் நேரம் ஒதுக்க வேண்டும் - கர்நாடக நீர்பாசன துறை அமைச்சர்

மேகதாது அணை திட்டம் குறித்து பேச தமிழக முதலமைச்சர் நேரம் ஒதுக்குமாறு கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என இருமாநில அரசுகளும் மக்களும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

* தற்போது மேகதாது அணை திட்டம் குறித்து, தமிழக அரசும் தமிழ் மக்களும் தவறான புரிதலைக்

கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள சிவகுமார், இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு காணவே கர்நாடக அரசு விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

* நடப்பாண்டில் பெய்த நல்ல மழையால், காவிரியில் நீர் அதிகரித்து மேட்டூர் அணை நிரம்பிய போதும், பெரும்பாலான நீர் கடலில் கலக்க விடப்பட்டதாக தெரிவித்துள்ள சிவகுமார், மேகதாது அணை கட்டப்பட்டால், அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, மேகதாது அணை குறித்து ஆலோசனை நடத்த தமிழக முதலமைச்சர் நேரம் வழங்க வேண்டும் எனவும் சிவகுமார் தனது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்