கர்நாடகா மாநிலம் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான தண்ணீர் தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது. வினாடிக்கு 2 ஆயிரத்து 885 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. அணையில் போதிய நீர் இருப்பது உள்ளதால், இந்த ஆண்டு கோடையில் குடிநீர் பஞ்சம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.