மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று வடசென்னை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த போட்டியில், வடசென்னையில் இருந்து, ஏழு பேர் பங்கேற்றனர். இதில், அஸ்விதா என்ற மாணவி தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்றார். காமேஷ், வீரேஸ் வரன் ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கம் வென்றனர். இவர்களுக்கான பாராட்டு விழா மணலியில் நடைபெற்றது. அப்போது, மாணவர்கள் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.