ஒரு ஊரே இறங்கி மீன் பிடிக்கும் போல! அடேங்கப்பா இப்படி ஒரு திருவிழாவா? சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த ஆலங்குடி கிராமத்தில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மேலமாகாணம் சூரக்குடி கண்மாயில் 3 ஆண்டுகளாக பிடிக்காமல் மீன்கள் வளர்க்கப்பட்ட நிலையில், மீன்பிடித் திருவிழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் பாரம்பரிய ஊத்தா மீன்பிடிக் கூடைகளுடன் பங்கேற்றனர். கிராம மக்கள் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர், கண்மாய் பராமரிப்புக் கட்டணம் வசூலிக்கப்பட்டு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து போட்டிப்போட்டு கண்மாயில் இறங்கியவர்கள், கட்லா, ரோகு, ஜிலேபி கெண்டை, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை ஆர்வத்துடன் பிடித்தனர்.