தமிழ்நாடு

``எந்த கட்சிக்காரனும் என்னைய ஒன்னும் ஆட்ட முடியாது'' - பச்சை பச்சையாக பேசிய நைனா முகமது..ஆடியோ வைரல்

தந்தி டிவி

ஹஜ், உம்ரா புனித யாத்திரை அழைத்துச் செல்வதாக கூறி லட்சக் கணக்கில் பண மோசடி செய்ததாக டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றின் மீது சுமார் 70க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் ஒன்று திரண்டு புகாரளித்துள்ளனர்.

காரைக்காலில் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் நைனா முகமது. இவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு சுமார் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஹஜ் மற்றும் உம்ரா புனித பயணம் செல்லும் ஆசையில் பல லட்ச ரூபாய் பணமும், தங்களின் பாஸ்போர்ட்டுகளையும் கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அனைவரையும் உம்ரா பயணத்திற்கு அழைத்துச் செல்லாத நைனா முகது... பணத்தையும், பாஸ்போர்ட்டையும் திருப்பித் தராமல் மோசடி செய்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து, நைனா முகமதுவின் டிராவல்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், இது குறித்து போலீசிலும் புகாரளித்திருக்கின்றனர். இதனிடையே, கடந்தாண்டும் இதே பாணியில் உம்ரா பயணத்திற்கு அனுப்பி வைப்பதாக கூறி இஸ்லாமியர்கள் சிலரிடம் தலா 40 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று நைனா முகமது மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஹஜ்-உம்ரா பண மோசடி மீட்புக்குழு என்ற குழு ஒன்றை துவங்கிய நிலையில், சுமார் 70க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து போலீசிலும் புகாரளித்திருக்கின்றனர். இந்நிலையில், பணத்தை திருப்பி கேட்ட பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் தொணியில் நைனா முகமது பேசிய செல்போன் ஆடியோ ஒன்றும் வெளியாகி பரவி வருகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்