காரைக்காலில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 55 வயதான நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோட்டுச்சேரி பூக்காரதெருவை சேர்ந்த விஜயன், தன் வீட்டுக்கு அருகே வசித்து வந்த 12 வயது சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் தெரிந்த சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளிக்கவே விஜயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது விசாரணைக்கு பயந்து போன விஜயன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.