கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள பெரியவிளை பகுதியில், முன்னாள் ராணுவ வீரரின் மகளும் கல்லூரியில் படித்து வேலை பார்த்து வந்தவருமான ஏஞ்சல் என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இவரை ஆன்டனிராஜ் என்பவர் ஒருதலையாகக் காதலித்துத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததே தற்கொலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
தற்கொலை செய்து கொண்ட ஏஞ்சலினின் வீட்டிற்கு சென்ற ஆன்டனிராஜை, அவரது உறவினர்கள் கல்லால் அடித்துக்கொலை செய்துவிட்டு தப்பியோடினர். ஒரே ஊரில் நடந்த இந்த இரட்டைக் கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷூல் நாகர் உத்தரவின்பேரில், கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.