தமிழ்நாடு

பெற்றோரின் 50வது மணநாள் விழாவுக்கு வந்த மகன் பலியான பரிதாபம்

தாய், தந்தையின் 50வது திருமண நாளை கொண்டாட டெல்லியில் இருந்து குமரி வந்த மகன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

புலியூர்குறிச்சி...கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளது...டெல்லியில் வசிக்கும் சதீஷ், பெற்றோரின் 50வது திருமணநாளை கொண்டாட சொந்த ஊரான புலியூர்குறிச்சிக்கு குடும்பத்துடன் வந்தார்.... வீட்டருகே உள்ள தெப்பகுளத்தில் உறவினர்களுடன் குளிக்க சென்றபோது, எதிர்பாராதவிதமாக சதீஷின் மகன் அனீஷ்(19) குளத்தில் மூழ்கினார்.

அதிர்ச்சியடைந்த சதீஷூம் அவரது உறவினர் அகிலேஷூம் அனீஷை மீட்க சென்றனர். இதை பார்த்த அப்பகுதி மக்களும் குளத்தில் குதித்து உயிரை காப்பாற்ற உதவி செய்தனர். கரை சேர்ந்த 3 பேருக்கும் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டதால் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சதீஷ் உயிரிழந்தார்.

மற்ற 2 பேரின் உயிரை காப்பாற்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால், தனியார் ஆம்புலன்சில் ஆக்சிஜன் காலியானதால் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்த உறவினர்கள், அரசு மருத்துவமனை நிர்வாகத்தை அணுகி உதவி கேட்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி ஆக்ஸிஜன் சிலிண்டர் கொடுக்க இயலாது என மருத்துவர்கள் மறுத்ததால் அங்கு கடும் வாக்குவாதம் உருவானது. இதனால், ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அவர்களுக்கு தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு