தமிழ்நாடு

குமரி மாவட்டம் பூத்துறை மீனவ கிராமத்தில் பச்சிளம் குழந்தை உட்பட 50க்கும் மேற்பட்டோரை விரட்டி விரட்டி கடித்த வெறிநாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

தந்தி டிவி

குமரி மாவட்டம் தூத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூத்துறை மீனவ கிராமத்தில் பச்சிளம் குழந்தை உட்பட 50 க்கும் மேற்பட்டோரை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய். தொடர்ச்சியாக மருத்துவமனைக்கு படையெடுக்கும் நாய்கடி பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அச்சத்தில் உறைந்து உள்ள மக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

குமரி மாவட்டம் தூத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாக பூத்துறை மீனவ கிராமம் உள்ளது இந்த கிராமத்தை சுற்றி ஏராளமான வெறிநாய்கள் சுற்றி வருகின்றன இந்த நாய்கள் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளை அவ்வப்போது விரட்டி சென்று கடிக்க முயல்வதும் கடிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது மேலும் வாகனங்களில் செல்லும் நபர்களை வெறிநாய்கள் விரட்டி செல்லும் போது வாகனங்களில் இருந்து தவறி விழுந்து காயம் ஏற்படும் நிலைகளும் இருந்து வரும் நிலையில் இன்று காலை முதல் வெறிநாய் ஒன்று பூத்துறை பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை வீடுகளுக்குள் புகுந்தும் சாலைகளில் நடந்து செல்லும் போது விரட்டி விரட்டி கடித்து காயப்படுத்தி உள்ளது இதில் பச்சிளம் குழந்தை உட்பட 50 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்தவர்கள் வரிசையாக தூத்தூர் அரசு ஆரம்பப் சுகாதார நிலையத்திற்கு படையெடுத்த நிலையில் அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இதில் முதற்கட்டமாக பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றி திரியும் வெறி நாயை பிடித்து மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்