தமிழ்நாடு

தந்தை கொல்லப்பட்ட வழக்கில் மகன் கைது : 9 ஆண்டுகளுக்கு பின்பு துப்புதுலங்கியது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஆண்டுகளுக்கு முன் தந்தையை கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஆண்டுகளுக்கு முன் தந்தையை கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே ஆரையூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 9 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிலையில் கிருஷ்ணனின் மகன் ஷாஜியின் நண்பரான வினு, ஒரு மாதத்திற்கு முன் மாயமானார். அதைத் தொடர்ந்து, ஷாஜி தலைமறைவானதால், போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். குமரி மாவட்ட எல்லையில் பதுங்கி இருந்த அவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, சொத்துக்காக தந்தையை 9 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்ததாகவும், அதை அறிந்து கொண்டு, பணம் கேட்டு மிரட்டிய வினுவை, 20 நாட்களுக்கு முன்பு கொலை செய்ததாகவும், ஷாஜி கூறியுள்ளார். இதையடுத்து ஷாஜியை போலீஸார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்