கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மாற்றுத்திறனாளி வழக்கறிஞரை தாக்கியதாக தந்தை, மகன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தக்கலை அருகே மணலி பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஜோஸ்கிரிஸ்துதாஸ், பூதப்பாண்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஜோஸ்கிரிஸ்துதாஸுக்கும் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.அப்போது பரைக்கோடு பகுதியைச் சேர்ந்த ரவி, அவரது மகன் விபின், செல்வன் மற்றும் ஜெகன் ஆகிய 4 பேரும் சேர்ந்து தன்னை தாக்கியதாக ஜோஸ்கிரிஸ்துதாஸ் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 4 பேரையும் தேடி வருகின்றனர்